ADDED : ஜூலை 21, 2024 08:00 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி வ. உ. சி., நகரைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாராம் 75. வடுகபட்டி வராகநதி ஆற்றின் வடக்கே இவரது தென்னந்தோப்பில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் திருடு போனது.
தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர். பெரியகுளம் வடகரை தெற்கு பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் விவசாயி குமரேசன் 58.
அழகர்சாமிபுரம் கல்லார் ரோட்டுப்பகுதியில் இவருடைய தென்னந்தோப்பில் ரூ.30,000 மதிப்புள்ள மின் மோட்டார் திருடு போனது. இரு பகுதியில் நடந்த திருட்டு குறித்து தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-