/உள்ளூர் செய்திகள்/தேனி/ வரத்து குறைவால் இஞ்சி விலை கிலோ ரூ.200 ஆக உயர்வு வரத்து குறைவால் இஞ்சி விலை கிலோ ரூ.200 ஆக உயர்வு
வரத்து குறைவால் இஞ்சி விலை கிலோ ரூ.200 ஆக உயர்வு
வரத்து குறைவால் இஞ்சி விலை கிலோ ரூ.200 ஆக உயர்வு
வரத்து குறைவால் இஞ்சி விலை கிலோ ரூ.200 ஆக உயர்வு
ADDED : ஜூன் 12, 2024 12:15 AM
கம்பம் : இஞ்சி வரத்து குறைவு காரணமாக விலை வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.
இஞ்சி சமையலில் முக்கிய பங்கு வசிக்கிறது. இது செரிமான கோளாறுகளை சரி செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் இஞ்சி சாகுபடி இல்லை. தமிழக தேவைக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து தான் வாங்குகிறோம். தமிழகத்திற்கு அதிகளவு கர்நாடகாவில் இருந்து தான் வருகிறது.
தற்போது இஞ்சியின் விலை வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.200 ஐ தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு கடந்த சில வாரங்களாகவே நீடிக்கிறது. காரணம் அண்டை மாநிலங்களிலும் இஞ்சி மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர். இதனால் வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. வரத்து குறைவால் விலை உயர துவங்கியுள்ளது.
இஞ்சி சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்தி வருகிறது. எனவே, கம்பம் வட்டாரத்தில் ஒரு சிலர் இஞ்சி சாகுபடி செய்ய முன் வந்துள்ளனர்.
கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறுகையில், கடல்மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இருக்கிறோம். இஞ்சி சாகுபடிக்கு ஆயிரம் மீட்டர் தேவைப்படும். எக்டேருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். மகசூல் பெற 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
தண்ணீர் அதிகம் தேவைப்பட்டாலும் தேங்கி நிற்க கூடாது. வழிந்து ஒட வேண்டும் போன்ற பல நிபந்தனைகளால் விவசாயிகள் தயங்குகின்றனர். தற்போது ஒரு சிலர் முன் வந்துள்ளனர். இஞ்சி சாகுபடியை ஊக்குவிக்க எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் தரப்படுகிறது என்றார்.