ADDED : ஜூன் 07, 2024 06:39 AM
போடி: போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் காமாட்சி 60. இவருக்கும் போடி வ.உ.சி., வடக்கு தெருவை சேர்ந்த முருகன் 65. என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
நேற்று காமாட்சி வீட்டில் இருக்கும் போது, அங்கு வந்த முருகன், காமாட்சியை தகாத வார்த்தையால் பேசி, அடித்து காயம் ஏற்படுத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
காயம் அடைந்த காமாட்சி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காமாட்சி மனைவி கோசலை புகாரில் போடி டவுன் போலீசார் முருகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.