/உள்ளூர் செய்திகள்/தேனி/ திறனறித் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் திறனறித் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திறனறித் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திறனறித் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திறனறித் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 07, 2024 06:40 AM
தேனி: அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர்ந்துள்ள மாணவர்கள் திறனறித்தேர்விற்கு ஜூன் 26க்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் தலா 500 மாணவர்கள், மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.10ஆயிரம் என கல்லுாரி இளநிலை படிப்பு முடிக்கும் வரை வழங்கப்படுகிறது. இந்தாண்டு திறனறித்தேர்வு ஜூலை 21ல் நடக்கிறது.இத்தேர்விற்கு அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து, தற்போது அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர்ந்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இருதாள்களாக நடைபெறும். முதல்தாளில் கணிதம், 2ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.
தேர்வு எழுது விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். அதனை பூர்த்தி செய்யது ஜூன் 11 முதல் ஜூன் 26க்குள் தேர்வு கட்டணம் ரூ. 50 உடன் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.