/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆகாயத்தாமரையை அகற்ற செங்குளத்தில் இருந்து கருங்குளத்திற்கு தண்ணீர் கடத்தல் ஆகாயத்தாமரையை அகற்ற செங்குளத்தில் இருந்து கருங்குளத்திற்கு தண்ணீர் கடத்தல்
ஆகாயத்தாமரையை அகற்ற செங்குளத்தில் இருந்து கருங்குளத்திற்கு தண்ணீர் கடத்தல்
ஆகாயத்தாமரையை அகற்ற செங்குளத்தில் இருந்து கருங்குளத்திற்கு தண்ணீர் கடத்தல்
ஆகாயத்தாமரையை அகற்ற செங்குளத்தில் இருந்து கருங்குளத்திற்கு தண்ணீர் கடத்தல்
ADDED : ஜூன் 18, 2024 05:05 AM

பெரியகுளம் : லட்சுமிபுரம் செங்குளத்தில் பரவிய ஆகாயத்தாமரை அகற்ற அருகேயுள்ள கருங்குளத்திற்கு ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் கடத்தப்படுகிறது.
செங்குளம் கண்மாய் 50 ஏக்கர் பரப்பிலானது. ஐந்து மாதங்களுக்கு முன் இக்கண்மாயில் பரவிய ஆகாயத்தாமரை கண்மாயில் நீரே தெரியாத அளவிற்கு வளர்ந்தது. லட்சுமிபுரம் ஊராட்சி கழிவுநீரும் கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் வீசி ஆகாயத்தாமரை அபரீதமாக வளர்ந்தது. பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்து மாதவன் முயற்சியால் நிதி திரட்டி ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை கிராமத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
முதலில் படகு மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் முயற்சி பலன் இல்லை. இதனை தொடர்ந்து கொச்சியில் இருந்து வந்த மிதவை வாகனம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றி மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் டிராக்டரில் கொட்டி அப்புறப்படுத்தினர். மே 28 ல் பனி துவங்கி 25 நாட்களில் சுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தினமும் ரூ.40 ஆயிரம் செலவிடுகின்றனர். அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் முளைப்பதால் ஆகாயத்தாமரை அகற்றும் பணி சவாலாக மாறியது. இதனால் அடுத்த கட்ட முயற்சியாக மண் மேவி செயல்படாத மதகு சீரமைத்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்தது. தண்ணீர் செல்லும் வாய்க்கால் மேடாக உள்ளதால் இந்தப்பணி நிறுத்தப்பட்டது.
ஆகாயத்தாமரை இருக்கும் செங்குளம் கரிசல் மண்ணில் தண்ணீர் உறிஞ்சாமல் தண்ணீர் தேங்கும்.
தண்ணீரை முழுமையாக வற்றுவதற்கு, 20 அடி தூரத்தில் உள்ள கருங்குளம் சுண்ணாம்பு தன்மையுடைய சுங்கான் மண். இது தண்ணீரை உறிஞ்சும் தன்மையுடையது. எனவே செங்குளத்தில் இருந்து தண்ணீர் கருங்குளத்திற்கு 100 குதிரை திறன் கொண்ட ராட்சத மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி குழாய் வழியாக தண்ணீர் கடத்தப்படுகிறது.
கிராமத்தினர் கூறுகையில்: ஓரிரு நாட்களில் செங்குளத்தில் உள்ள 7 அடி தண்ணீர் முழுமையாக கருங்குளத்திற்கு செல்லும். பிறகு 5 முதல் 7 நாட்களில் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்படும் என தெரிவித்தனர்.