/உள்ளூர் செய்திகள்/தேனி/ முடிவு வட்டார சுகாதார நிலையங்களில் வாரம் ஒருமுறை ஆப்பரேஷன்கள் செய்ய வசதி களுடன் கூடிய நவீன தியேட்டர்கள் அமைப்பு முடிவு வட்டார சுகாதார நிலையங்களில் வாரம் ஒருமுறை ஆப்பரேஷன்கள் செய்ய வசதி களுடன் கூடிய நவீன தியேட்டர்கள் அமைப்பு
முடிவு வட்டார சுகாதார நிலையங்களில் வாரம் ஒருமுறை ஆப்பரேஷன்கள் செய்ய வசதி களுடன் கூடிய நவீன தியேட்டர்கள் அமைப்பு
முடிவு வட்டார சுகாதார நிலையங்களில் வாரம் ஒருமுறை ஆப்பரேஷன்கள் செய்ய வசதி களுடன் கூடிய நவீன தியேட்டர்கள் அமைப்பு
முடிவு வட்டார சுகாதார நிலையங்களில் வாரம் ஒருமுறை ஆப்பரேஷன்கள் செய்ய வசதி களுடன் கூடிய நவீன தியேட்டர்கள் அமைப்பு
ADDED : ஜூன் 18, 2024 05:02 AM
கம்பம் : வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் ஒரு நாள் ஆப்பரேஷன் செய்யவும், அதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய ஆப்பரேஷன் தியேட்டர்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அரசு ஆரம்ப, வட்டார சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களை தவிர்த்து, மற்ற அரசு மருத்துவமனகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆப்பரேஷன் தியேட்டர்கள் உள்ளன. இங்கு ஆப்பரேஷன்கள் வழக்கமாக நடைபெறுகிறது.
ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆப்பரேஷன் தியேட்டர்கள் இல்லை. வட்டார சுகாதார நிலையங்களில் மட்டும் தியேட்டர்கள் உள்ளன. இங்கு ஆப்பரேஷன்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. குடும்பநல அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.
கிராமங்களில் இருந்து ஆப்பரேஷன்களுக்கு வருபவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகள் அல்லது தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் அதிகமான ஆப்பரேஷன்கள் மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது. இங்கு நாளுக்கு நாள் நோயாளிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மருத்துவ கல்லுாரியில் நிலவும் நெருக்கடியை குறைக்க கிராமங்களில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆப்பரேஷன் வாரத்தில் ஒரு நாள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆப்பரேசன் தியேட்டர் ஒன்றை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தவும், ஏற்கெனவே உள்ள தியேட்டரில் தேவையான வசதிகள் செய்யவும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.
ஆப்பரேஷனுக்கு அருகில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர்களை அழைத்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய அறுவை சிகிச்கைகள் இனி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.