பண்ணை குட்டைகள் அமைக்க அரசு மானியம்
பண்ணை குட்டைகள் அமைக்க அரசு மானியம்
பண்ணை குட்டைகள் அமைக்க அரசு மானியம்
ADDED : ஜூன் 18, 2024 05:06 AM
கம்பம் : மானாவாரி நிலங்கள் மற்றும் தோட்டங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, பருவமழை குறிப்பிட்ட காலக்கெடுவில் பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.
எனவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பல வழிகளில் அரசு முயற்சி செய்து வருகிறது. அதில் ஒன்றாக பண்ணை குட்டைகள் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பண்ணை குட்டைகள் மானாவாரி நிலங்கள் மற்றும் இறவை பாசன தோட்டங்களிலும் அமைக்கலாம். மாவட்டத்தில் உள்ள 8 உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு தலா 3 வீதம் 24 பண்ணை குட்டைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கம்டம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறுகையில், 20 அடி நீளம், 20 அடி அகலம் 3 அடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்க வேண்டும்.
புளு கலர் பாலிதின் சீட் தரையில் விரித்திருக்க வேண்டும். மழை நீரையோ அல்லது ஆழ்துளை கிணற்று நீரையோ நிரப்ப வேண்டும்.
இந்த பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றனர்.
தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.