/உள்ளூர் செய்திகள்/தேனி/ மேகமலையில் தொடர்கிறது மழை ; அணைகளில் நீர் மட்டம் உயர்கிறது மேகமலையில் தொடர்கிறது மழை ; அணைகளில் நீர் மட்டம் உயர்கிறது
மேகமலையில் தொடர்கிறது மழை ; அணைகளில் நீர் மட்டம் உயர்கிறது
மேகமலையில் தொடர்கிறது மழை ; அணைகளில் நீர் மட்டம் உயர்கிறது
மேகமலையில் தொடர்கிறது மழை ; அணைகளில் நீர் மட்டம் உயர்கிறது
ADDED : ஜூலை 19, 2024 06:36 AM
கம்பம் : தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமாகமேகமலை பகுதி விளங்குகிறது . ஆண்டுதோறும் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். இந்தாண்டு அதிக வெப்பம் காரணமாக கோடையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
இந்நிலையில் உச்சபட்ட வெப்பம் நிலவியது மாறி கடந்த 20 நாட்களாக மேக மூட்டமாக உள்ளது. சாரல் மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இரவும், பகலும் விடாமல் சாரல் மழையும், காற்றும் வீசுகிறது.
இதனால் இங்குள்ள ஹைவேவிஸ், இரவங்கலாறு, மணலாறு, வெண் ணியாறு அணைகளுக்கு நீர் வரத்து ஆரம்பமாகியுள்ளது . அணைளில் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
மேகமலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழையும், பலத்த காற்றும் வீசுவதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது.