/உள்ளூர் செய்திகள்/தேனி/ உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனியில் இரு டாஸ்மாக் மூடல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனியில் இரு டாஸ்மாக் மூடல்
உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனியில் இரு டாஸ்மாக் மூடல்
உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனியில் இரு டாஸ்மாக் மூடல்
உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனியில் இரு டாஸ்மாக் மூடல்
ADDED : ஜூன் 16, 2024 05:23 AM
தேனி: தேனி பழனிசெட்டிபட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரு டாஸ்மாக் கடைகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று மூடப்பட்டது.
பழனிசெட்டிபட்டி ஆஜிக் அரபுகனி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவில், பழனிசெட்டிபட்டியில் இருந்து பூதிப்புரம் செல்லும் ரோட்டில் சினிமா தியேட்டர் அருகே செயல்பட்டு வந்த இரு டாஸ்மாக் கடைகளில் 24 மணிநேரம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு போலீசாரும் உடந்தை. மது அருந்துவோர் நகைபறிப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்பாக கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இரு கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: பூதிப்புரம் ரோட்டில் சினிமா தியேட்டர் அருகே உள்ள இரு கடைகளையும் உடனே மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஜூன் 28 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று இரு கடைகளும் மூடப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், கடைகள் அமைந்துள்ள பகுதியில் கலெக்டர், எஸ்.பி., டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டு ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யஉள்ளனர் என தெரிவித்தனர்.