ADDED : ஜூன் 16, 2024 05:23 AM
வீட்டில் இருந்த 6 பவுன் நகை மாயம்
தேனி: பத்திரகாளிபுரம் கிழக்குத்தெரு பாண்டீஸ்வரி, போடி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது கணவர் ஈஸ்வரன் ஊர் கோம்பைத் தொழு. இங்கு மே 15ல் நடந்த திருவிழாவிற்காக பாண்டீஸ்வரி சென்று வந்தார். வீட்டிற்கு வந்தவர் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 6 பவுன் எடையிலான இரு செயின்களை கைப்பையில் வைத்தார். இந்நிலையில் ஜூன் 3 கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த இரு செயின்களும் காணவில்லை. பாண்டீஸ்வரி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி ஒருவர் காயம்
தேனி: கோடங்கிபட்டி பிச்சைமணி 77, தீர்த்ததொட்டி கோயில் பூஜாரி. இவரது மனைவி சாந்தா 65. இவர் தீர்த்த தொட்டி அருகே ரோட்டை கடந்தார். அப்போது துரைாஜபுரம் காலனி விஜயகுமார் 24, ஓட்டி வந்த டூவீலர் சாந்தா மீது மோதியது. காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிச்சைமணி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.