/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேவதானப்பட்டி அருகே கார் கவிழ்ந்து இருவர் காயம் தேவதானப்பட்டி அருகே கார் கவிழ்ந்து இருவர் காயம்
தேவதானப்பட்டி அருகே கார் கவிழ்ந்து இருவர் காயம்
தேவதானப்பட்டி அருகே கார் கவிழ்ந்து இருவர் காயம்
தேவதானப்பட்டி அருகே கார் கவிழ்ந்து இருவர் காயம்
ADDED : ஜூன் 16, 2024 05:22 AM
பெரியகுளம்: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பால் பண்ணை தெருவை சேர்ந்த பாண்டி மகன் டிராவிட் 19. பெரியகுளம் பகுதி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கவியரசன் 20. இருவரும் சில்வார்பட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி காரில் சென்றனர். காரை கவியரசன் ஓட்டினார். எ.புதுப்பட்டி அருகே உள்ள பழைய முந்தைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கார் செல்லும் போது, வலதுபுறமாக வேகமாக முன்னாள் சென்ற பஸ்சினை முந்தும்போது எதிரே டூவீலர் வந்தது.
இதனால் இடதுபுறமாக திருப்பும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் டிராவிட், கவியரசன் காயமடைந்தனர். இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.