சுடுகாட்டில் முட்புதர்கள் அகற்றம்
சுடுகாட்டில் முட்புதர்கள் அகற்றம்
சுடுகாட்டில் முட்புதர்கள் அகற்றம்
ADDED : ஜூன் 26, 2024 07:52 AM
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி சுடுகாட்டில் இடையூறாக இருந்த முட்புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த சுடுகாட்டை சக்கம்பட்டியில் உள்ள பல்வேறு சமூகத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல மாதங்களாக பராமரிப்பின்றி புதர் மண்டி கிடந்ததால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை முடிக்கச் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. 10 வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி, பேரூராட்சி நிர்வாகம் மூலம் சுடுகாடு பகுதியில் இருந்த முட்புதர்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட பின் முட்புதர்கள் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது.