/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா: அங்கன்வாடி இல்லாததால் சிரமம் போடி நகராட்சி 17 வது வார்டு குடியிருப்போர் குமுறல் மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா: அங்கன்வாடி இல்லாததால் சிரமம் போடி நகராட்சி 17 வது வார்டு குடியிருப்போர் குமுறல்
மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா: அங்கன்வாடி இல்லாததால் சிரமம் போடி நகராட்சி 17 வது வார்டு குடியிருப்போர் குமுறல்
மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா: அங்கன்வாடி இல்லாததால் சிரமம் போடி நகராட்சி 17 வது வார்டு குடியிருப்போர் குமுறல்
மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா: அங்கன்வாடி இல்லாததால் சிரமம் போடி நகராட்சி 17 வது வார்டு குடியிருப்போர் குமுறல்

அடிப்படை வசதி தேவை
வடக்கு காளியம்மன் கோயில் தெரு ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. சொக்கன் சந்தில் சாக்கடை தடுப்புகள் சேதம் அடைந்து ஓராண்டு ஆகியும் சீரமைக்கப்பட வில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி தெருவில் தேங்குகிறது. தெருக்களில் தேங்கிய குப்பைக் கழிவை அகற்றவும், சாக்கடை துார்வார துப்புரவுப் பணியாளர்கள் சரிவர வருவது இல்லை. போதிய சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக வெளியேறாததால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. முறையாக சாக்கடை தடுப்புகள் அமைக்காததால் பெரும் பள்ளமாக உள்ளது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும் போது பள்ளம் தெரியாத நிலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. வடக்கு காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் குடிநீர் பைப் லைன் அமைப்பதற்காக பேவர் பிளாக் கற்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்தும் சீரமைக்காமல் பணிகள் கிடப்பில் உள்ளன. மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் பெரும் பள்ளங்களாக உள்ளன. வாகன விபத்துக்களை தவிர்க்கவும், அசம்பாவிதம் ஏற்படும் முன் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்கவும், சாக்கடை தடுப்புகள் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.