/உள்ளூர் செய்திகள்/தேனி/ வேட்பாளர்கள் செலவு கணக்கு; சரிபார்ப்புப் பணி ஜூன் 29ல் துவக்கம் வேட்பாளர்கள் செலவு கணக்கு; சரிபார்ப்புப் பணி ஜூன் 29ல் துவக்கம்
வேட்பாளர்கள் செலவு கணக்கு; சரிபார்ப்புப் பணி ஜூன் 29ல் துவக்கம்
வேட்பாளர்கள் செலவு கணக்கு; சரிபார்ப்புப் பணி ஜூன் 29ல் துவக்கம்
வேட்பாளர்கள் செலவு கணக்கு; சரிபார்ப்புப் பணி ஜூன் 29ல் துவக்கம்
ADDED : ஜூன் 26, 2024 07:51 AM
தேனி: தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு கணக்கு விபரங்கள் ஜூன் 29ல் துவங்கி, ஜூலை 8 வரை சரிபார்ப்பு திட்டமிடப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் ரூ. 95 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன் இரு முறையும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் 26 நாட்களுக்கு பின் 3 வது முறையும் செலவு கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். தேனி தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
செலவின பார்வையாளர்கள் தரம்வீர் தண்டி, கனிஸ்ட்யாசு வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை பார்வையிட தொகுதிக்கு ஜூன் 29ல் வருகை தர உள்ளனர். அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் செலவு விபரங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.