/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுய உதவிக்குழு தலைவரை மிரட்டிய பேரூராட்சி தலைவர், அலுவலர்கள் மீது வழக்கு சுய உதவிக்குழு தலைவரை மிரட்டிய பேரூராட்சி தலைவர், அலுவலர்கள் மீது வழக்கு
சுய உதவிக்குழு தலைவரை மிரட்டிய பேரூராட்சி தலைவர், அலுவலர்கள் மீது வழக்கு
சுய உதவிக்குழு தலைவரை மிரட்டிய பேரூராட்சி தலைவர், அலுவலர்கள் மீது வழக்கு
சுய உதவிக்குழு தலைவரை மிரட்டிய பேரூராட்சி தலைவர், அலுவலர்கள் மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2024 12:20 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் சுகாதார பணி மேற்கொள்வது சம்மந்தமாக சுயஉதவி குழு தலைவரை மிரட்டியதாக நீதிமன்ற உத்தரவில் பேரூராட்சி தலைவர், அலுவலர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டி.சுப்பலாபுரத்தைச் சேர்ந்தவர் போதுராஜா 43, சிறப்பு சுய உதவி குழு தலைவராக இருந்து வருகிறார். ஆண்டிபட்டி பேரூராட்சியில் தூய்மை பணி செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக பேரூராட்சி தலைவர் சந்திரகலா, சுகாதார ஆய்வாளர் சூரியகுமார், மேஸ்திரி சரவணகுமாரிஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒப்பந்த அடிப்படையில் பேரூராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள ரூ.20 ஆயிரம் பணம் தர வலியுறுத்தியுள்ளனர்.
போது ராஜா பணம் தன்னால் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலர்கள் அவரை இழிவாக பேசி, 'உனக்கு இனி பணி வழங்க இயலாது' என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போதுராஜா தேனி மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் பேரூராட்சி தலைவர் சந்திரகலா, சுகாதார ஆய்வாளர் சூர்யா குமார், மேஸ்திரி சரவணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.