/உள்ளூர் செய்திகள்/தேனி/ பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பணம் திருட்டு பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பணம் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பணம் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பணம் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பணம் திருட்டு
ADDED : ஜூன் 12, 2024 12:20 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி தங்கம் 46, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தன்னுடன் பணிபுரியும் பால்பாண்டியன் என்பவரின் திருமணத்திற்கு செல்வதற்காக நகை மற்றும் பணத்தை பர்சில் வைத்து அதனை கட்டைப் பையில் வைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று விட்டு, திருமணத்திற்கு செல்ல தாமதமானதால் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக க.விலக்கு சென்றுள்ளார்.
பின் அங்கிருந்து தனியார் பஸ்சில் சென்று ஆண்டிபட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பால் வாங்குவதற்காக பர்ஸ் வைத்திருந்த கட்டை பையை பார்த்தபோது கிழிந்திருந்தது பையில் இருந்த பர்ஸ் திருடு போயிருந்தது.
பர்சில் 2 பவுன் செயின், 3 பவுன் தங்க மாலை, மற்றும் பணம் ரூ.3500 வைத்திருந்தார்.
நகை, பணம் வைத்திருந்த பர்ஸ் திருடு போனது குறித்து ஆண்டிபட்டி போலீசில் செய்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.