ADDED : ஜூன் 12, 2024 12:21 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அரிசிக்கடை தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் 44. இவர் அரிசி கடை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடையின் மாடியில் வசித்து வருகிறார். நேற்று இரவு மர்மநபர்கள் கடையை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.2.70 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள கடையில் நடந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரணை செய்து வருகின்றனர்.