மருத்துவ மனை கட்ட செய்தியில் பாக்ஸ்
மருத்துவ மனை கட்ட செய்தியில் பாக்ஸ்
மருத்துவ மனை கட்ட செய்தியில் பாக்ஸ்
ADDED : ஜூலை 10, 2024 04:18 AM
கம்பம் அரசு மருத்துவமனையில் இடிந்த கட்டடத்தை பார்வையிட்ட எம்.பி., தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவமனை பில்டிங் ஸ்ட்ராங்காக உள்ளது. எலிவேசன் சிலாப் விழுந்ததில் தொழிலாளி பலியானார். 21 நாட்கள் ஆக வேண்டும். 10 நாட்களில் மூட்டுபிரித்ததால் பில்லர் விழுந்துள்ளது. தொழிலாளியின் தவறு தான் காரணம். பொறியாளர்களிடம் கேட்டேன். ஆங்கர் கம்பி கட்டி தான் கட்டி உள்ளனர் . சிலாப் மட்டுமே இடிந்துள்ளது. கட்டடம் ஸ்ட்ராங்காக உள்ளது . அதையும் சரி செய்து தருவதாக இன்ஜினியர், ஒப்பந்தகாரர் கூறி உள்ளனர். யாரும் பயப்படத் தேவையில்லை. கட்டடத்திற்கு தகுதி சான்று வழங்கிய பின்தான் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றார். உடன் செயற்பொறியாளர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.