/உள்ளூர் செய்திகள்/தேனி/ அடிக்கடி மின்தடை n காற்றின் வேகம் அதிகரிப்பால் கம்பிகள் உரசி n தளர்வான மின் கம்பிகளை மாற்ற வலியுறுத்தல் அடிக்கடி மின்தடை n காற்றின் வேகம் அதிகரிப்பால் கம்பிகள் உரசி n தளர்வான மின் கம்பிகளை மாற்ற வலியுறுத்தல்
அடிக்கடி மின்தடை n காற்றின் வேகம் அதிகரிப்பால் கம்பிகள் உரசி n தளர்வான மின் கம்பிகளை மாற்ற வலியுறுத்தல்
அடிக்கடி மின்தடை n காற்றின் வேகம் அதிகரிப்பால் கம்பிகள் உரசி n தளர்வான மின் கம்பிகளை மாற்ற வலியுறுத்தல்
அடிக்கடி மின்தடை n காற்றின் வேகம் அதிகரிப்பால் கம்பிகள் உரசி n தளர்வான மின் கம்பிகளை மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 04:16 AM
ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கு ஆண்டிபட்டி, கண்டமனூர், வைகை அணை துணை மின் நிலையங்கள் மூலம் மின் வினியோகம் நடைபெறுகிறது. கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் வழித்தடங்களில் மின் கம்பிகள் தளர்வான நிலையில் தொய்வாக உள்ளன. இப் பகுதியில் கடந்த சில வாரங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மின் கம்பிகள் ஒன்றை ஒன்று உரசுகிறது. பல இடங்களில் மரக்கிளைகள், உயர்ந்து வளர்ந்த முள் செடிகள் மீது மின் கம்பிகளில் உரசி பாதிப்பு ஏற்படுகிறது. இதே போல் தென்னை மரங்களிலிருந்து மின்கம்பிகளில் விழும் தென்னங்கீற்றுகளாலும் மின்தடை ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளன. சித்தார்பட்டி, எஸ்.கதிர்நரசிங்கபுரம், மஞ்சிநாயக்கன்பட்டி, ராஜதானி உள்ளிட்ட பல கிராமங்களில் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல இடங்களில் மின் கம்பிகள் தளர்வான நிலையில் தொய்வாக உள்ளன. தற்போது காற்றின் வேகம் ஆண்டிபட்டி பகுதியில் அதிகம் உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தளர்வான மின் கம்பிகள் குறித்து மின் துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பராமரிப்புக்காக மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்படுகிறது. மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை மட்டும் வெட்டி விடுகின்றனர். மற்ற பராமரிப்பு பணிகள் செய்வதில்லை. இரவில் மின்தடை ஏற்பட்டால் சரி செய்ய முடியவில்லை. தளர்வான மின் கம்பிகளை மாற்றி அமைக்க மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.