/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க தடை; தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க தடை; தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க தடை; தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க தடை; தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க தடை; தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூன் 28, 2024 12:16 AM

கம்பம், : தொடர் மழை காரணமாக சுருளி, சின்ன சுருளி அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் காட்டாற்று வெள்ளத்தால் பயணிகள் பாதுகாக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கூடுதல் மழை பெய்து வருவதால் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு , வெண்ணியாறு, இரவங்களாறு, மகாராசா மெட்டு , தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் மழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சுருளி அருவிக்கு கூடுதல் தண்ணீர் வரத்து இருந்தது. நேற்று காலை சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது அறிந்த வனத்துறையினர் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பினர்.
ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு குறைந்தால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றார்.
சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
கடமலைக்குண்டு: கோம்பைத்தொழு அருகே உள்ளது சின்னச் சுருளி அருவி. இப்பகுதியில் பெய்யும் சாரல் மழை, சீதோஷ்ண நிலை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். இரு நாட்களாக மேகமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் சின்னச் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கூறியதாவது: நேற்று முன்தினம் மாலையில் அருவியில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவது அறிந்த வனத்துறையினர் உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர்.
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான சோதனைச் சாவடி பகுதிக்கு சென்று விட்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் அருகில் காட்டாற்று வெள்ளம் அதிகரித்தது. அருவிக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் நீரில் மூழ்கியது. சோதனைச்சாவடி அருகே அருவிக்கு செல்லும் ரோட்டில் உள்ள தரைப் பாலமும் நீரில் மூழ்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல முடியவில்லை. அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது என்றனர்.