ADDED : ஜூன் 28, 2024 12:16 AM
போடி : பயறு விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண்துறை உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
போடி பகுதியில் சாரல் மழை பெய்து வருவது, ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில் விவசாயிகள் நிலங்களில் நிலக்கடலை, தட்டப் பயறு, உளுந்து பயிரிட வேளாண்துறை மானியத்தில் விதைப்புக்கான விதைகள் வழங்கப்படுகிறது.பயறு வகை ஊடு பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் போக நிலக்கடலை கிலோ ரூ. 48 க்கும், தட்டப் பயறு கிலோ ரூ. 50 க்கும், உளுந்து கிலோ ரூ. 51.50 க்கும் வழங்கப்படுகிறது. பயறு வகைகளை பயிரிட விரும்பும் விவசாயிகள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றுடன் போடி வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.