/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பம் மெயின் ரோட்டில் ஜூலை 2ல் ஆக்கிரமிப்பு அகற்றம் கம்பம் மெயின் ரோட்டில் ஜூலை 2ல் ஆக்கிரமிப்பு அகற்றம்
கம்பம் மெயின் ரோட்டில் ஜூலை 2ல் ஆக்கிரமிப்பு அகற்றம்
கம்பம் மெயின் ரோட்டில் ஜூலை 2ல் ஆக்கிரமிப்பு அகற்றம்
கம்பம் மெயின் ரோட்டில் ஜூலை 2ல் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 28, 2024 12:16 AM
கம்பம் : கம்பம் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் ஜூலை 2 ல் மேற்கொள்ள இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நகரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதும், மறுநாளே கடைக்காரர்கள் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது.
வரும் ஜூலை 2 ல் கம்பம் மெயின்ரோட்டில் காமயகவுண்டன்பட்டி ரோடு பிரிவில் இருந்து அரசு மருத்துவமனை வரை ரோட்டின் இரண்டு பக்கமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக கடைக்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.