ADDED : ஜூன் 28, 2024 12:18 AM
சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள எர்ணம்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் சமச்சீர் உரமிடல், ரசாயன இடுபொருங்களை குறைத்தல் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு துணை இயக்குனர் ராஜசேகர் தலைமை வகித்தார். வட்டார மேலாளர் ரேவதி வரவேற்றார். சின்னமனூர் உதவி இயக்குனர் பாண்டி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றி பேசினார். மண் பரிசோதனை செய்வதன் அவசியம் பற்றி தொழில்நுட்ப வல்லுநர் சபரிநாதன் பேசினார். ட்ரோன் மூலம் உரமிடல் மற்றும் மருந்து தெளித்தல் பற்றி கோபிநாத் விளக்கினார்.
வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஞானசம்பந்தம் வேளாண் வணிக உதவி அலுவலர் சரவணன் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் விஜயசங்கர், தொழில்நுட்ப மேலாளர் ரேவதி, உதவி மேலாளர் விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.