Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ADDED : ஜூன் 28, 2024 12:18 AM


Google News
மதுபாட்டில் பதுக்கி இருவர் கைது

தேனி: அல்லிநகரம் எஸ்.ஐ., அல்போன்ஸ்ராஜா தலைமையிலான போலீசார் அல்லிநகரம் எஸ்.என்.ஆர்., சந்திப்பு கட்டண கழிப்பறை அருகே ரோந்து சென்றனர். அப்போது தேனி பள்ளிவாசல் தெரு பிரசாத் 23, ரூ.840 மதிப்புள்ள 6 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

அல்லிநகரம் எஸ்.ஐ., பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் அழகாபுரி நாகம்மாள் கோயில் அருகே ரோந்து சென்று அன்னஞ்சி முனுசாமி கோயில் தெரு ராஜேந்திரன் 50, விற்பனைக்காக ரூ.3080 மதிப்புள்ள 22 மதுபாட்டில்களையும், ம் மதுபாட்டில் விற்ற ரூ.3090 பணத்தையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

தங்கநகை, லேப்டாப் திருட்டு

தேனி: அரண்மனைப்புதுார் பசுமை நகர் தனபால் மனைவி சுகன்யா 33. தேனியில் உள்ள மருந்து கடையில் பணி புரிகிறார். கணவர் தனபால் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் 8 ல் சுகன்யா தனது தாய் வீடு உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றுவிட்டார். ஜூன் 25ல் சுகன்யாக குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்த்த போது, கிரில் கேட், கதவின் பூட்டுக்கள உடைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். அலைபேசி மூலம் சுகன்யாவிற்கு தகவல் அளித்தார். வீட்டிற்கு வந்த சுகன்யா, வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, ரூ.87 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், புளுடூத் பவர் பேங்க், லேப்டாப் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது. சுகன்யா புகாரில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us