/உள்ளூர் செய்திகள்/தேனி/ சி.ஓ.ஏ., தேர்வு அறிவிப்பில் தாமதம் 30 ஆயிரம் தேர்வர்கள் பாதிப்பு வணிகவியல் பள்ளிகளின் நிர்வாகிகள் மனு சி.ஓ.ஏ., தேர்வு அறிவிப்பில் தாமதம் 30 ஆயிரம் தேர்வர்கள் பாதிப்பு வணிகவியல் பள்ளிகளின் நிர்வாகிகள் மனு
சி.ஓ.ஏ., தேர்வு அறிவிப்பில் தாமதம் 30 ஆயிரம் தேர்வர்கள் பாதிப்பு வணிகவியல் பள்ளிகளின் நிர்வாகிகள் மனு
சி.ஓ.ஏ., தேர்வு அறிவிப்பில் தாமதம் 30 ஆயிரம் தேர்வர்கள் பாதிப்பு வணிகவியல் பள்ளிகளின் நிர்வாகிகள் மனு
சி.ஓ.ஏ., தேர்வு அறிவிப்பில் தாமதம் 30 ஆயிரம் தேர்வர்கள் பாதிப்பு வணிகவியல் பள்ளிகளின் நிர்வாகிகள் மனு
ADDED : ஜூலை 07, 2024 02:24 AM
ஆண்டிபட்டி:சி.ஓ.ஏ., தேர்வு அறிவிப்பில் தமிழக அரசு காலதாமதம் செய்வதால் 30 ஆயிரம் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர் என மாநில வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பின் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது:
டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் சிஓஏ (கம்ப்யூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன்) கம்ப்யூட்டர் பாடங்களுக்கான அரசு தேர்வுகளை சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கம் நடத்தி வருகிறது. தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட்டில் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் நல்ல வாய்ப்பு உள்ளது. தேர்வுக்கான அறிவிப்பும் விண்ணப்பங்களும் கடந்த ஜூன் 7ல் வெளியிடப்படும் என அறிவித்துவிட்டு ஜூன் 26ல் அறிவிப்பு வேறொரு தேதியில் வெளியிடப்படும் என அறிவித்தனர். ஆனால் தற்போது வரை சி.ஓ.ஏ., தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் 30 ஆயிரம் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பணியில் உள்ளவர்கள் நிரந்தரமாவதற்கு சிஓஏ தேர்ச்சி அவசியம் என்பதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய ஜூலை 11 என கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைப்புக்கான சிறப்பு வல்லுனர் குழு கூட்டத்திற்கு ஜூலை 9ல் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆகஸ்ட் தேர்வு விண்ணப்பங்களை அனுப்பும் நிலையில் இன்னும் 3நாட்கள் மட்டும் இடைவெளியில் புதிய பாடத்திட்டத்திற்கான வல்லுநர் குழு கூட்டம் கூட்டவேண்டியதின் அவசியம் ஏன்.
புதிய பாடத்திட்டத்திற்கான வல்லுனர் குழு கூட்டம் கடந்த ஜனவரியில் கூட்டச் சொல்லி தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீரராகவ ராவ் அறிவுறுத்தி இருந்தார்.
இயக்குனரகத்தில் உள்ள கூடுதல் இயக்குனர், வட்டார அலுவலர்கள் காலதாமதம் செய்து அவசர கோலத்தில் தற்போது புதிய பாடத்திட்டத்திற்கான வல்லுனர் குழு கூட்டத்திற்கு அழைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே தமிழக முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.