ADDED : ஜூலை 06, 2024 06:04 AM

தேனி: பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி ரயில்வே கேட் தெருவில் வசிப்பவர் பவுன்ராஜ், முனியம்மாள். இவர்கள் நேற்று காலை கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.
நேற்று காலை மண் சுவரால் ஆன தகர மேற்கூரை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் இருவரின் வீடுகளும் எரிந்து சேமடைந்தன.
அருகில் உள்ள பொதுமக்கள் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். விபத்து நடந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்றதால் அதிஷ்டவசமாக தப்பபினர்.
தீ விபத்து குறித்து பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.