/உள்ளூர் செய்திகள்/தேனி/ வண்டல் மண் எடுக்க காலம் கடந்த அனுமதியால் பயனில்லை: நீர் நிரம்பிய கண்மாய்களில் மண் எடுக்க வாய்ப்பில்லை வண்டல் மண் எடுக்க காலம் கடந்த அனுமதியால் பயனில்லை: நீர் நிரம்பிய கண்மாய்களில் மண் எடுக்க வாய்ப்பில்லை
வண்டல் மண் எடுக்க காலம் கடந்த அனுமதியால் பயனில்லை: நீர் நிரம்பிய கண்மாய்களில் மண் எடுக்க வாய்ப்பில்லை
வண்டல் மண் எடுக்க காலம் கடந்த அனுமதியால் பயனில்லை: நீர் நிரம்பிய கண்மாய்களில் மண் எடுக்க வாய்ப்பில்லை
வண்டல் மண் எடுக்க காலம் கடந்த அனுமதியால் பயனில்லை: நீர் நிரம்பிய கண்மாய்களில் மண் எடுக்க வாய்ப்பில்லை
ADDED : ஜூலை 07, 2024 02:36 AM
கம்பம்: காலம் கடந்து குளங்களில் வண்டல்மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதால் எவ்வித பயனும் ஏற்படாது. குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மண் அள்ள முடியாது என விவசாயிகள் புலம்புகின்றனர்.
நீர்வளத்துறை , ஊரக வளர்ச்சித் துறை கண்மாய்கள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் ஆண்டிபட்டி 43, பெரியகுளம் 37, தேனி 14, உத்தமபாளையம் 45, போடி 23 என மாவட்டத்தில் 162 கண்மாய், குளங்களில் மண் எடுத்து கொள்ள கலெக்டர் ஷஜீவனா அனுமதி வழங்கி உள்ளார். நீர் நிலைகளில் இருந்து வண்டல் மற்றும் களிமண்ணை எடுக்க tnesevai.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் உரிய அனுமதி பெற்று இலவசமாக பெற்று கொள்ளலாம் என அறிவித்தள்ளனர். இந்த அறிவிப்பால் பயனில்லை என விவசாயிகளும், மண்பாண்ட தொழிலாளர்களும் புலம்புகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், தற்போது கம்பம் ஒட்டு, ஒடப்படி, வீரப்ப நாயக்கன்குளம், உத்தமபாளையம் தாமரைகுளம், குப்பிசெட்டி குளம், சின்னமனூர் செங்குளம், உடைய குளம், கருங்கட்டான்குளம் என மாவட்டத்தில் உள்ள கண்மாய் குளங்களில் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. தண்ணீர் உள்ள போது எப்படி மண் அள்ள முடியும். இதில் மண் அள்ளுவது சாத்தியமில்லை. அரசு அறிவிப்பு செய்தும் பயன் இல்லை என புலம்புகின்றனர். இது குறித்து கம்பம் விவசாய சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில், 'தற்போது காலம் கடந்த அனுமதி அரசு வழங்கி உள்ளது. இதனால் பயன் இல்லை. மேலும் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. வயல்களில் நெல்நடவு மும்முரமாக நடக்கிறது. எனவே, கண்மாய்களில் நீர் இருப்பு இருக்க வேண்டியது அவசியம். தண்ணீர் உள்ள காலங்களில் மண்எடுப்பது சாத்தியமில்லை. தற்போது அரசு அனுமதி கொடுத்தாலும் ஏப்ரல், மே மாதங்களில் தான் மண் எடுக்க எடுக்க முடியும் என்றார்.