/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ பாலம் இடிந்து சிக்கிய லாரி விவசாய பணிகள் பாதிப்பு பாலம் இடிந்து சிக்கிய லாரி விவசாய பணிகள் பாதிப்பு
பாலம் இடிந்து சிக்கிய லாரி விவசாய பணிகள் பாதிப்பு
பாலம் இடிந்து சிக்கிய லாரி விவசாய பணிகள் பாதிப்பு
பாலம் இடிந்து சிக்கிய லாரி விவசாய பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2024 10:48 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டையில் ஏ பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்காலில் பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் வழியே விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரம், டிராக்டர் போன்றவறை கொண்டு சென்று வந்தனர். பாலம் கட்டப்பட்டு, 20 ஆண்டுகள் கடந்த நிலையில், வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை மூங்கில் ஏற்றிய லாரி, பாலத்தில் வழியாக வந்த போது, லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து உள்வாங்கியது. இதில், லாரி பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியது. பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், 'பாலம் வலுவிழந்த நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டினர். தற்போது, பாலம் உடைந்து போனதால், அறுவடையாகும் நெல்லை எப்படி விற்பனைக்கு கொண்டு வருவது என தெரியவில்லை. எனவே, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, புதிய பாலம் கட்டித் தர வேண்டும்' என்றனர்.