/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ டாட்டூ ஷாப்பில் விபசாரம் உரிமையாளர் கைது * 3 பெண்கள் மீட்பு டாட்டூ ஷாப்பில் விபசாரம் உரிமையாளர் கைது * 3 பெண்கள் மீட்பு
டாட்டூ ஷாப்பில் விபசாரம் உரிமையாளர் கைது * 3 பெண்கள் மீட்பு
டாட்டூ ஷாப்பில் விபசாரம் உரிமையாளர் கைது * 3 பெண்கள் மீட்பு
டாட்டூ ஷாப்பில் விபசாரம் உரிமையாளர் கைது * 3 பெண்கள் மீட்பு
ADDED : ஜூன் 06, 2024 08:47 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், டாட்டூ, பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக எஸ்.பி., ஆஷிஷ் ராவத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது குறித்து விசாரணை நடத்த கும்பகோணம் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், நேற்று கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு டாட்டூ ஷாப்பிற்கு சந்தேகம் படும் வகையில் பலர் வந்து செல்வதாக உறுதி செய்தனர். பிறகு அந்த டாட்டூ ஷாபிற்கு சென்ற போலீசார் கண்காணித்த போது, ஷாப் உட்பகுதியில் பெண்கள் வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே, போலீசார் டாட்டூ ஷாப் உரிமையாளரான அம்மாசத்திரத்தை சோ்ந்த தர்மகிருஷ்ணன்,61, என்பவரை கைது செய்தனர். மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கும்பகோணம் பகுதியை சேர்ந்த 30,35 வயது கொண்ட மூன்று பெண்களையும், மற்றொரு இளைஞரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.