/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ அரசுக்கு எதிராக கருத்து? ஹிந்து அமைப்பு நபர் கைது! அரசுக்கு எதிராக கருத்து? ஹிந்து அமைப்பு நபர் கைது!
அரசுக்கு எதிராக கருத்து? ஹிந்து அமைப்பு நபர் கைது!
அரசுக்கு எதிராக கருத்து? ஹிந்து அமைப்பு நபர் கைது!
அரசுக்கு எதிராக கருத்து? ஹிந்து அமைப்பு நபர் கைது!
ADDED : ஜூலை 04, 2024 02:13 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஹிந்து எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் சந்தோஷ்குமார், 29. இவர், ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பின் சார்பில், ஜூன் 24 முதல், 30ம் தேதி வரை, கோவாவில் நடந்த, வைஷ்விக் ஹிந்து ராஷ்ட்ர மஹோத்ஸவ் என்ற தேசிய மாநாட்டில் பங்கேற்றார். இதில், நாட்டின் பல்வேறு ஹிந்து அமைப்பு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் 200 கோவில்கள் இடிக்கப்பட்டதாக கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் சந்தோஷ் குமார் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தி.மு.க., அரசை விமர்சித்து, அவதுாறு பரப்பிய சந்தோஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூரைச் சேர்ந்த லெனின், 45, என்பவர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, அரசு மீது அவதுாறு பரப்பியதாக போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.