/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ பெரிய கோவிலில் 36 கேமராக்கள் ஒன்றுகூட வேலை செய்யாத சோகம் பெரிய கோவிலில் 36 கேமராக்கள் ஒன்றுகூட வேலை செய்யாத சோகம்
பெரிய கோவிலில் 36 கேமராக்கள் ஒன்றுகூட வேலை செய்யாத சோகம்
பெரிய கோவிலில் 36 கேமராக்கள் ஒன்றுகூட வேலை செய்யாத சோகம்
பெரிய கோவிலில் 36 கேமராக்கள் ஒன்றுகூட வேலை செய்யாத சோகம்
ADDED : ஜூலை 04, 2024 02:32 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு, ஆந்திர மாநிலம் சித்துாரைச் சேர்ந்த லட்சுமணகுமார், 62, என்பவர், தன் குடும்பத்தினருடன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
அவரின் தாய் வயதானவர் என்பதால் சக்கர நாற்காலியில் வைத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பெருவுடையார், பெரியநாயகி அம்மன் சன்னிதியில் தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு நடந்த அபிஷேகத்தை பார்த்து விட்டு, கோவிலின் நுழைவாயில் பகுதியான கேரளாந்தகன் நுழைவாயிலுக்கு வந்தார்.
அப்போதுதான், தன் கால்சட்டை பாக்கெட்டை பிளேடால் கீறி, 15,000 ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பெரியநாயகி அம்மன் சன்னிதியில் தன்னை இடித்த நபர்தான் பணத்தை திருடி இருக்க வேண்டும் என சந்தேகமடைந்த அவர், அங்கிருந்த போலீசாரிடம் தகவல் அளித்து
'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யக் கூறினார்.
ஆனால், பெரிய கோவிலில் 36 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும், ஒரு கேமரா கூட வேலை செய்யவில்லை என்ற விபரம் தெரிந்து, மேலும் அதிர்ச்சி அடைந்தார். பெரிய கோவிலில் சிசிடிவி கேமராக்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசின் தொல்லியல் துறை கண்டுகொள்ளவில்லை.