/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ துாய்மை பணியாளரை கண்டதும் ஓடாத பஸ் எதிர்த்து நடந்த மறியலால் ஊழியர்கள் சஸ்பெண்ட் துாய்மை பணியாளரை கண்டதும் ஓடாத பஸ் எதிர்த்து நடந்த மறியலால் ஊழியர்கள் சஸ்பெண்ட்
துாய்மை பணியாளரை கண்டதும் ஓடாத பஸ் எதிர்த்து நடந்த மறியலால் ஊழியர்கள் சஸ்பெண்ட்
துாய்மை பணியாளரை கண்டதும் ஓடாத பஸ் எதிர்த்து நடந்த மறியலால் ஊழியர்கள் சஸ்பெண்ட்
துாய்மை பணியாளரை கண்டதும் ஓடாத பஸ் எதிர்த்து நடந்த மறியலால் ஊழியர்கள் சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 03, 2024 02:04 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் துாய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் அனைவரும் பல கிராமங்களில் இருந்து, தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து, அங்கிருந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு டவுன் பஸ்சில் செல்வது வழக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக முறையான நேரத்தில் டவுன் பஸ்களை இயக்காமலும், துாய்மை பணியாளர்களை கண்டதும், கண்டக்டர்கள் பஸ்களில் ஏற்றாமல், அவர்களை தரக்குறைவாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கம்போல நேற்றும், குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை இயக்காமல் போக்குவரத்து பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் முன் பஸ்களை மறித்து, தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் பேச்சு நடத்தினர்.
அப்போது, பெண்கள் கூறியதாவது:
இலவச பஸ் விட்டதில் இருந்து பெண்கள் அவமானம் தான் படுகிறோம். 10 ரூபாய் கொடுத்து போக முடியாமல் நாங்கள் இல்லை. எங்களைக் கண்டாலே, டவுன் பஸ்சை இயக்குவது கிடையாது; முறையாக நிறுத்துவது கிடையாது.
இவ்வாறு கூறினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அலுவலர்கள் உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோரை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம், ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில், 15க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களை, குப்பை போல அடைத்து அழைத்துச் சென்றனர்.
பெண்களை பஸ்சில் ஏற்றாதது குறித்து விசாரித்த அதிகாரிகள், நேற்று, கண்டக்டர் யேசுதாஸ், பஸ் ஸ்டாண்ட் நிலைய நேர காப்பாளர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.