/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ லாரி மோதி கவிழ்ந்தது பஸ் தாய், மகன் உட்பட 3 பேர் பலி லாரி மோதி கவிழ்ந்தது பஸ் தாய், மகன் உட்பட 3 பேர் பலி
லாரி மோதி கவிழ்ந்தது பஸ் தாய், மகன் உட்பட 3 பேர் பலி
லாரி மோதி கவிழ்ந்தது பஸ் தாய், மகன் உட்பட 3 பேர் பலி
லாரி மோதி கவிழ்ந்தது பஸ் தாய், மகன் உட்பட 3 பேர் பலி
ADDED : ஜூன் 14, 2024 02:45 AM

தென்காசி:தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி சென்ற தனியார் பஸ், நேற்று மதியம் 2:00 மணிக்கு நான்கு ரோடு சந்திப்பு இலத்துார் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கேரளாவில் இருந்து கனிம வளம் ஏற்ற, சுரண்டை நோக்கி சென்ற லாரி பஸ் மீது திடீரென மோதியது. இதில், பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. பயணியர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
சிவராமபேட்டையை சேர்ந்த மாரித்துரை மனைவி அழகு சுந்தரி, 35, சங்கரன்கோவில் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி செல்வி, 55, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி உள்ளிட்ட போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் அழகுசுந்தரியின் 4 வயது மகன் அக் ஷய பாலா சிகிச்சைக்கு துாக்கிச் செல்லும் வழியில் இறந்தார்.
பஸ் டிரைவர் விக்னேஷ் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலெக்டர் கமல் கிஷோர் மீட்பு பணிகளை பார்வையிட்டார்; தனியார் பஸ் மீட்கப்பட்டது.