/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ கடையம் சார் - பதிவாளர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் கடையம் சார் - பதிவாளர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
கடையம் சார் - பதிவாளர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
கடையம் சார் - பதிவாளர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
கடையம் சார் - பதிவாளர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
ADDED : ஜூன் 14, 2024 02:44 AM
தென்காசி:தென்காசி மாவட்டம் கடையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதர் தலைமையில் எஸ்.ஐ.,ரவி, சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜா, பிரபு ஆகியோர் நேற்று முன்தினம் மாலை சோதனை மேற்கொண்டனர். சார் - பதிவாளர் பைசூல் ராணியிடம் இருந்து கணக்கில் வராத 1.59 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதையடுத்து, அம்பாசமுத்திரத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, 45,000 ரூபாய், நில ஆவணங்கள், நகைகள் வாங்கிய ரசீதுகள் கிடைத்தன. அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.