Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ குற்றாலத்தில் குளு..குளு...சீசன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலத்தில் குளு..குளு...சீசன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலத்தில் குளு..குளு...சீசன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலத்தில் குளு..குளு...சீசன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ADDED : ஜூன் 28, 2024 02:48 AM


Google News
குற்றாலம்:தென்காசி மாவட்டத்தில் தற்போது பரவலாக பகல், மாலை, இரவு என நாள் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் ௫ கிளைகளிலும், பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுந்த வண்ணம் இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக நேற்று முன்தினம் ௩வது நாளாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ௩ நாளுக்கு பின் நேற்று காலை முதல் மெயினருவி, ஐந்தருவி, பழையக்குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்டவைகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயினருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. இதனால் பேரிகாட் அமைத்து ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்தருவி ௫ கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. பழையக்குற்றாலம், சிற்றருவி, புலியருவி தண்ணீர் நன்றாக விழுந்தது.

தென்காசி, குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் குளுமையான சூழல் நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us