ADDED : ஜூன் 24, 2024 01:41 AM
காரைக்குடி : காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.முதல்வர் ஹேமமாலினி தலைமையேற்றார்.வித்யா கிரி கல்விக்குழும முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா முன்னிலை வகித்து யோகா குறித்து பேசினார்.அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் கல்லுாரி முதல்வர் பெத்தாலட்சுமி தலைமையேற்றார்.
என்.எஸ்.எஸ்.,அலுவலர் சுந்தரி வரவேற்றார். யோகா பயிற்சியாளர் சுப்பு யோகாசனங்களை மாணவர்களிடையே செய்து காண்பித்தார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்.,அலுவலர்கள் தெய்வமணி லட்சுமண குமார் செந்தில்குமார் சுந்தரி செய்திருந்தனர்.*மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிறுவனர் ராஜேஸ்வரி, தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.