/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்குதிருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கு
திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கு
திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கு
திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கு
ADDED : ஜூன் 24, 2024 01:41 AM
காரைக்குடி : காரைக்குடி ஓ.
சிறுவயல் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பில் விபத்தில் உடைந்த உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்குடியில் இருந்து ஓ. சிறுவயல் செல்லும் சாலையில், திருச்சி -ராமேஸ்வரம் நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளது. நான்கு சாலை சந்திக்கும் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதோடு உயிரிழப்பும் ஏற்படுகிறது.இச்சாலையில் சிக்னல் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இச்சாலையில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் போது சாய்ந்து விழுந்தது.தற்போது மின் விளக்கு இல்லாததால் நான்கு சாலை சந்திப்பு இருளில் மூழ்கி கிடக்கிறது. விபத்து அபாயம் நிலவுகிறது. சேதமடைந்த உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.