ADDED : ஜூன் 24, 2024 01:45 AM
காரைக்குடி : பள்ளத்துார் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லுாரியில் மாவட்ட அளவிலான செஸ்போட்டி நடந்தது.
இதில், வயது 7 முதல் 15க்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். நகரத்தார் டிரஸ்ட் தலைவர் தேனப்பன், மாவட்ட செஸ் கழக தலைவர் கருப்பையா, கல்லுாரி செயலர் அண்ணாமலை, சீனிவாசன், செஸ் கழக செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சாந்தி பங்கேற்றனர்.சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட அளவில் 400 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்று வழங்கப்பட்டது.