ADDED : மார் 23, 2025 07:32 AM
சிவகங்கை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கவிதை, குழு பாடல் மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆசிரியர் முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்தலைமை வகித்தார். வட்டார தோட்டக்கலை அலுவலர் தண்ணீர் தினம் குறித்து பேசினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.