Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாற்றப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம்

மாற்றப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம்

மாற்றப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம்

மாற்றப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம்

ADDED : மார் 23, 2025 07:33 AM


Google News
திருப்புவனம் : திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முன்னறிவிப்பின்றி திடீரென இடமாற்றம் செய்ததால் நேற்று பத்திரப்பதிவிற்கு வந்தவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகம் 1882ம் ஆண்டு கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இந்த பத்திரப்பதிவு அலுவலகம் தமிழக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராமங்களின் இடம் விற்பனையும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

பழமை வாய்ந்த கட்டடம் பல இடங்களில் சேதமடைந்து கட்டடத்தில் மழை நீர் புகுந்து அடிக்கடி ஆவணங்கள் ஈரமாகி விடுகின்றன.

இதனை தவிர்க்க புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து தற்காலிகமாக தி.புதூரில் ஏற்கனவே தாலுகா அலுவலகம் செயல்பட்ட கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு நேற்று காலை திடீரென ஆவணங்கள் அனைத்தையும் தற்காலிக கட்டடத்திற்கு கொண்டு சென்றனர்.

பொதுமக்களுக்கு எந்த வித முறையான அறிவிப்பும் செய்யவில்லை. நேற்று பத்திரம் பதிவு செய்ய டோக்கனும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த நோயாளி ஒருவரை செவிலியர்கள், உதவியாளர் உதவியுடன் நேற்று பத்திரம் பதிவு செய்ய அழைத்து வந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் பத்திரம் பதிவு செய்ய முடியாது என கூட சொல்லாமல் காத்திருக்க வைத்தனர். நீண்ட நேரத்திற்கு பின் மீண்டும் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.

அலுவலகம் மாற்றப்படுவது குறித்து எந்த வித அறிவிப்பும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விடுமுறை நாட்களில் பத்திரம் பதிவு செய்ய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

நேற்று பத்திரம் பதிவு செய்ய பலரும் வந்திருந்த நிலையில் அலுவலகம் மாற்றப்பட்டதால் பத்திரம் பதிவு செய்யவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us