ADDED : மார் 23, 2025 07:19 AM
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
என்.எஸ்.எஸ்., யூத் ரெட் கிராஸ், டாக்டர். அழகப்பன் சயின்ஸ் சிட்டி லைன்ஸ் சங்கம் மற்றும் செங்கொடை பவுன் பவுண்டேஷன் சார்பில் முகாம் நடந்தது. முதல்வர் பெத்தாலட்சுமி தலைமை ஏற்றார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் சுந்தர்ராமன், லயன் சங்க மண்டலத் தலைவர் சித்தார்த்தன் கலந்து கொண்டனர்.
அழகப்பர் சயின்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் சிவா வரவேற்றார். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.