/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடி கணேசபுரம் சந்தை பயன்பாட்டிற்கு வருவது எப்போதுகாரைக்குடி கணேசபுரம் சந்தை பயன்பாட்டிற்கு வருவது எப்போது
காரைக்குடி கணேசபுரம் சந்தை பயன்பாட்டிற்கு வருவது எப்போது
காரைக்குடி கணேசபுரம் சந்தை பயன்பாட்டிற்கு வருவது எப்போது
காரைக்குடி கணேசபுரம் சந்தை பயன்பாட்டிற்கு வருவது எப்போது
ADDED : பிப் 11, 2024 12:19 AM

காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் திங்கள் சந்தையில் கட்டப்பட்டு வரும், புதிய கட்டடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காரைக்குடியில் வாரச்சந்தை கணேசபுரத்தில் திங்கள்கிழமை, கழனிவாசலில் வியாழக்கிழமை என இரு நாட்கள் செயல்படுகிறது. கணேசபுரம் சந்தையில் காரைக்குடி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படுப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு, 120 கடைகளுடன் கூடிய புதிய கட்டட பணிக்கான துவக்க விழா நடந்தது. இந்த கட்டடப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.