ராமதாஸை குருமூர்த்தி சந்தித்ததும் திருமாவளவனுக்கு ஏன் இத்தனை பதற்றம்?
ராமதாஸை குருமூர்த்தி சந்தித்ததும் திருமாவளவனுக்கு ஏன் இத்தனை பதற்றம்?
ராமதாஸை குருமூர்த்தி சந்தித்ததும் திருமாவளவனுக்கு ஏன் இத்தனை பதற்றம்?
ADDED : ஜூன் 05, 2025 02:24 PM

சென்னை: பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசியது தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே நடக்கும் மோதல் மற்றும் ராமதாஸ்- ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்: ஏற்கனவே நான் இது குறித்து பதில் கூறி இருக்கிறேன். இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி விவகாரம் அல்லது அவர்களின் குடும்ப விவகாரம். அதில் நான் கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை.
ஆனால் இன்றைக்கு, நடுவராக சென்று இருப்பவர் யார் என்பது ஒரு கேள்வியாக மாறி இருக்கிறது. பா.ம.க., தொடக்க காலத்தில், இடது சாரி சிந்தனையாளர்களின் வரவேற்பை பெற்றது. ஆனால் இன்றைக்கு வலது சாரி அரசியலுக்கு, அவர்கள் முழுமையாக போய்விட்டார்கள் என்பதை உணர்த்த கூடிய வகையில் இந்த பஞ்சாயத்தார்களின் முயற்சி வெளிப்படுகிறது.
பா.ம.க., இடது சாரி அரசியலால் தான் எழுச்சி பெற்றது என்பதை இன்றைக்கு ஜனநாயக சக்திகளாக இருக்கும் அனைவரும் நன்கு அறிவர். ஆனால் அது ஒரு வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது. அதன் அடிப்படையில் பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் இன்றைக்கு வெளிப்படையாக அம்பலம் ஆகி இருக்கிறார்கள் என்பது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகி இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
ஏன் பதற்றம்?
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப்
பேசியது தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனுக்கு பதற்றத்தை
ஏற்படுத்தி உள்ளது.