ADDED : பிப் 24, 2024 05:13 AM
பூவந்தி : பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் அசோக் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மகா பாண்டி வரவேற்றார். சாலை பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கனும், வாக்காளர் கடமை குறித்து தாசில்தார் விஜயகுமாரும் பேசினர். வாக்களிப்பது மக்களின் கடமையா, உரிமையா என ஓய்வுபெற்ற ஆணையர் அன்புதுரை தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. இளைஞரணி தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.