/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திறக்கப்படாத கழிப்பறை பல லட்சம் வீணாகிறது திறக்கப்படாத கழிப்பறை பல லட்சம் வீணாகிறது
திறக்கப்படாத கழிப்பறை பல லட்சம் வீணாகிறது
திறக்கப்படாத கழிப்பறை பல லட்சம் வீணாகிறது
திறக்கப்படாத கழிப்பறை பல லட்சம் வீணாகிறது
ADDED : ஜூன் 27, 2025 11:48 PM

தேவகோட்டை: கழிப்பறை கட்டி ஐந்து ஆண்டாகியும் திறக்காததால் புதர் மண்டி கட்டடம் வீணாகி வருகிறது.
தேவகோட்டை ஒன்றியம் தளக்காவயல் ஊராட்சியில் கடகாம்பட்டி கிராமத்தில் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து 2020 - -2021 ஆம் ஆண்டில் ரூ 5.25 லட்சத்தில் பொது கழிப்பறை கட்டப்பட்டது. கழிப்பறை கட்டி முடித்து பல மாதங்கள் கழித்து தான் தண்ணீர் , மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதுவும் அரைகுறையாக பணி செய்யப்பட்டு இருந்தது. முழு அளவில் தண்ணீர் இணைப்பு வழங்கவில்லை. இந்த சூழ்நிலையில் கட்டி முடித்து ஐந்து ஆண்டாகியும் பொது கழிப்பறை செயல்பாட்டிற்கு வரவில்லை. பயன்பாடு இல்லாத காரணத்தால் கழிப்பறை செல்லும் பாதையில் முட் செடி வளர்ந்து புதராகி விட்டது.