ADDED : ஜூன் 27, 2025 11:49 PM
காரைக்குடி: குன்றக்குடியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் நாண் மங்கல விழா கொண்டாடப்பட்டது. காலையில் பூஜை மடம் வழிபாடு சண்முகநாத சுவாமி கோயில் வழிபாடு நடந்தது.
தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகள் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் நுால் வெளியீட்டு விழா நடந்தது. சேதுபதி வரவேற்றார். நுாலினை, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் வெளியிட அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பெற்றுக் கொண்டார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார். செல்வராஜ் நன்றி கூறினார்.