ADDED : ஜூன் 27, 2025 11:48 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே விபத்துக்கள் அதிகம் நடக்கும் குறுகிய சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இவ்வொன்றியத்தில் மு.சூரக்குடியில் இருந்து மதுரை மாவட்டம் செம்மணிப்பட்டி செல்லும் சாலை அகலப்படுத்தபட்ட நிலையில் சில கி.மீ., துாரம் மட்டும் குறுகலாகவே உள்ளது. அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எதிரில் வாகனங்கள் வரும்போது பலர் டூவீலர்களில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.