ADDED : ஜூன் 27, 2025 11:47 PM

இளையான்குடி: இளையான்குடியிலிருந்து சாலைக்கிராமம் செல்லும் ரோட்டை ஒட்டி சிறுபாலை உள்ளது.இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சாலைக்கிராமம், ஆர்.எஸ். மங்கலம்,பரமக்குடி,இளையான்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்களில் சென்று வரும் மக்கள் ரோட்டை ஒட்டியுள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர்.
தற்போது சேதமடைந்த பஸ் ஸ்டாப் கட்டடம் அடிக்கடி இடிந்து விழுவதால் ஒதுங்கி நிற்க அச்சப்படுகின்றனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படுவதற்கு முன் சேதமடைந்துள்ள பஸ் ஸ்டாப்பை புதுப்பிக்க வேண்டும்.