/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புத்துாரில் பராமரிக்கப்படாத ஊருணிகள் : விநியோகமாகும் குடிநீரை பயன்படுத்த முடியவில்லைதிருப்புத்துாரில் பராமரிக்கப்படாத ஊருணிகள் : விநியோகமாகும் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை
திருப்புத்துாரில் பராமரிக்கப்படாத ஊருணிகள் : விநியோகமாகும் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை
திருப்புத்துாரில் பராமரிக்கப்படாத ஊருணிகள் : விநியோகமாகும் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை
திருப்புத்துாரில் பராமரிக்கப்படாத ஊருணிகள் : விநியோகமாகும் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை
UPDATED : ஜூலை 07, 2024 05:01 AM
ADDED : ஜூலை 07, 2024 02:13 AM

திருப்புத்துார் ஒன்றியகிராமங்களில் தற்போதுமேல்நிலைத்தொட்டி மூலம் உள்ளாட்சி அமைப்புகளால் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அந்த நீரை கிராமத்தினர் குடிக்கவோ, சமைக்கவோ பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. காரணம் உப்பு அல்லது உவர் சுவையாக இருப்பதாகவும், சமைத்தால் அரிசி நிறம் மாறிவிடும் என்றும் பயன்படுத்துவதில்லை.
முன்னர் பாரம்பரியமாக குடிநீர் ஊருணிகளில் நீர் எடுத்து, தேவைப்பட்டால் தேத்தான் விதையை தேய்த்து சுத்திகரித்து பயன்படுத்தி வந்த பழக்கம் தற்போதும் தொடர்கிறது. ஆனால் ஊருணிகள் பராமரிப்பின்றி உள்ளன. பல ஊருணிகளுக்கு வரத்துக்கால்வாய் தூர்ந்து விட்டது.
உதாரணமாக தென்மாவலி கத்தாளம்பட்டு செட்டிஊருணியில் மக்கள் குடிநீர் எடுத்து 15 ஆண்டுகளாகி விட்டது. இதில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தாலும் அந்த சுவை இல்லை. மாவலிக் கண்மாயிலிருந்து நீர் வரத்துள்ள கால்வாய் முற்றிலுமாக துார்ந்து விட்டது. மழை பெய்தால் சிறிதளவு நீரே சேகரமாகிறது.
கத்தாளம்பட்டு நாச்சியப்பன் கூறுகையில், மேல்நிலைத்தொட்டி நீர் புழங்கவும், குடிநீருக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரும் கிடைக்கிறது. இருந்தாலும் குடிநீர் ஊருணி நீரைப்போல் இல்லை. இதற்கான வரத்துக்கால்வாய் சீரமைக்க வேண்டும். ஊரணிக்குள் உள் கட்டு கட்டினால் நன்றாக நீர் தேங்கும் இந்த குக்கிராமத்திற்கு அது போதுமானது' என்றார்.
சூரிய ஒளி நேரடியாக 8 மணி நேரம் படும் நீர் குடிக்க பயன்படுத்த உரிய தகுதியான நீர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதைத்தான் ஊருணி அமைப்பில்மழைநீரை சேகரித்து நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
அதை மீண்டும் தொடர கிராமத்து ஊருணிகளையும், வரத்துக்கால்வாய்களையும் புனரமைக்க அரசு தனி கவனம் வேண்டியது அவசியமாகும்.