ADDED : ஜூலை 07, 2024 02:13 AM
காரைக்குடி: காரைக்குடி ஹவுசிங் போர்டு, பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள பாஸ்ட் புட் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி, தலைமையில் சாக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். உணவுப் பொருட்களில் கேடு விளைவிக்க கூடிய செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா, சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்.
உணவு மாதிரிகளை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.